Latest News
இன்று முதல் மூன்று நாட்களுக்கு… 144 தடை உத்தரவு… எந்த மாவட்டத்தில் தெரியுமா…?
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்திருக்கின்றார். மாமன்னர் பூலித்தேவரின் 309 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்கின்ற சட்டப்பிரிவு 163 ஒன்றின் படி 144 தடை சட்டம் அமல்படுத்தப்படும் என்ற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இந்த 144 தடை அறிவிப்பின் படி 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வால், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.