Tamil Flash News

புல்வாமா தீவிரவாத தாக்குதல் – திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பலியான சுப்பிரமணியன்

Published

on

ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தாக்குதலில் சிவசந்திரன் மற்றும் சுப்பிரமணியன் என இரு தமிழக வீரர்களும் பலியாகினர்.          இதில், சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஐடிஐ படிப்பை முடிந்த அவர் பின்னார் ராணுவ பணியில் இணைந்தார். இவருக்கும், கிருஷ்ணவேணி என்கிற பெண்ணுக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. சமீபத்தில் ஒரு மாதம் விடுமுறை பெற்று ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் அவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மரணமடைந்தது அவரது குடும்பத்தால் தாங்க முடியவில்லை. இவரின் மரணம் குறித்து கண்ணீர் பேட்டியளித்துள்ள அவரின் மனைவி செண்பகவல்லி “ இராணுவத்தில் படும் துயரங்களை என் கணவர் என்னிடமிருந்து மறைத்து விடுவார்.  அவர் வீர மரணம் அடைந்துள்ளார். நாட்டுக்காக அவர் உயிரிழந்தது பெருமை என்றாலும் இது மரணிக்கும் வயது இல்லை. எங்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது” என கதறியபடி பேட்டியளித்தார்.

சுப்பிரமணியன் மரணம் அவர் வசித்து வந்த கிராமத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version