---Advertisement---

சிம்பு இடத்தை பிடித்த புளூசட்ட மாறன் – அதிரடி அறிவிப்பு

By Sri
Published on: September 13, 2019
blue sattai
---Advertisement---

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தமிழ் சினிமாவின் அபத்தங்களை கண்டபடி கிண்டலடிப்பதில் பிரபலமானவர். இவருக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தே வருகிறார்கள். குறிப்பாக தமிழ் திரையுலகில் பலரின் இவரின் விமர்சனத்திற்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

blue satta maaran

இந்நிலையில், தற்போது புளூசட்ட மாறன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். சிம்புவை வைத்து மாநாடு படத்தை அறிவித்த சுரேஷ் காமாட்சியே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 14ம் தேதி துவங்கவுள்ளது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக துவங்காத நிலையில், இப்படத்தில் இருந்து சிம்புவை சுரேஷ் காமாட்சி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

Sri