---Advertisement---

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குழப்பம்… செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சிக்கல்…!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கோரி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஓ.கா, ஏ ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தேதி எதுவும் குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமின் வழங்கப்பட்டது. இப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வெளியில் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் சிறைவாசலில் குவிந்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் நிபந்தனை ஜாமினில் செந்தில் பாலாஜி விடிவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுப்போம் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை சற்று நேரத்திற்கு முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரணை செய்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு... அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்...!

அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் இருக்கின்றது. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள் பிணை உத்தரவாக தங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் குறிப்பிடவில்லை என நீதிபதி கூறியிருந்தார்.

மேலும் விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதங்களை தாக்கல் செய்ய முடியும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி சிறையிலிருந்து இன்று ஜாமினில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!