---Advertisement---

என் இடத்தில என் ஆசிரியர அவமானப்படுத்துவதுவதா…? அன்பில் மகேஷ் ஆவேசம்…!

By Sri
Published on: September 6, 2024
---Advertisement---

என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வந்து என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருக்கின்றார்.

சென்னை அசோக் நகர், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் கூறினால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்று மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: “மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன். தினமும் அவர்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அவர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்று சொல்வது தவறான செய்தி. எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் இல்லை.

புதிய கல்விக் கொள்கையை கூட நாங்கள் இதற்காக ஏற்கவில்லை. தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு கிடையாது. ஆனால் அவர்களின் பின்னணியை சோதிக்காமல் என்ன மாதிரி பேசுகிறார் என்பதை தெரிந்து அழைத்து வந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நல்ல மதிப்பெண்கள் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை. பகுத்தறிவு உடன் செயல்படுவது தான் புத்திசாலித்தனம். பிறப்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யார் கூறினாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். பகுத்தறிவுவை விதைக்கும் இடம் பள்ளி” என்று அன்பின் மகேஷ் ஆவேசமாக பேசியிருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!