---Advertisement---

எஸ்.பி.பி மறைவு விவேக்கின் இரங்கல் கவிதை

Published on: September 26, 2020
---Advertisement---

நடிகர் விவேக் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாது இசையார்வம் மிக்கவர். அதுவும் எஸ்.பி.பி , இளையராஜா என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். வெறித்தனமாக அவர்களின் இசையை ரசிப்பவர் விவேக்.

எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கவிதையை விவேக் எழுதி இருக்கிறார்.

இணையற்ற குரல் வேந்தன். இடுகாட்டில் இன்றோ? உனைப் பிரிந்த இசையுலகு…. தாய் பிரிந்த கன்றோ? உன் சுரம் கேளா காதுகள் விதவைகள் அன்றோ? நினைப் போன்ற அன்புருவைக்… காண்பதினி என்றோ? மீளாத் துயிலில் நீங்கள்! ஆறாத் துயரில் நாங்கள்!

இதுதான் அந்த இரங்கல்பா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.