---Advertisement---

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவி! அதுக்கும் குற்றம் சொன்னா எப்படி?

By Sri
Published on: May 5, 2020
---Advertisement---

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.

கொரோனா காரணமாக சினிமாத் துறையே முடங்கியுள்ள நிலையில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரிசி உள்பட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதை அவர் முன்னணி தயாரிப்பாளர் கே ராஜனின் வேண்டுகோளை ஏற்று செய்தார்.

ஆனால் ரஜினியின் இந்த செயலுக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அதில் ‘தயாரிப்பாளர்கள் என்பவர்கள் முதலாளிகள். நடிகர்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்கள். தயாரிப்பாளர் என்ற முதலாளிகளுக்கு நடிகர் என்ற வேலைக்காரர் நிவாரணம் அளிப்பதா?. ’ என சில தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் கொடுப்பதென்றால் 50,000 அல்லது ஒரு லட்சம் பணமாகக் கொடுக்கவேண்டும், அவர்களை இப்படி சாப்பாட்டுக்காக கையேந்த வைப்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ ரஜினி என்ன செய்தாலும் அதற்கு விமர்சனம் சொல்ல இப்படி ஒரு கூட்டம் கிளம்பி வரும் என அந்த விமர்சனத்தை நிராகரித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படத்தின் பிரத்யேக விளம்பரப் பதாகை.

Massive Box Office Hit: முதல் வாரத்தில் ரூ.107 கோடியைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’!

Official editorial banner highlighting the court verdict and legal case involving actor Vimal.

1 ஆண்டு சிறை தண்டனை! – நடிகர் விமலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Official title and first look announcement poster for director R Raghav Mirdath's upcoming surreal film.

R Raghav Mirdath Next Movie! – ‘பன் பட்டர் ஜாம்’ இயக்குநரின் புதிய ஹாரர் படம்: டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில்!

Official editorial banner highlighting actor Vishal's three distinct getups in the movie Magudam.

Magudam Movie Updates! – 3 வித்தியாசமான கெட்டப், இளையராஜா வெறித்தனம்: மகுடம் படம் பற்றி விஷால் மாஸ் பேட்டி!

Official editorial banner celebrating Vijay Antony's birthday and the simultaneous Tamil-Telugu release of Appakutty.

Appakutty Movie Update! – தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’!

Official editorial banner highlighting cricketer Varun Chakravarthy's emotional Instagram post for actor Vijay.

உங்களை மிஸ் பண்ணுவேன்! – நடிகர் விஜய்க்காக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!