திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுவது உலகறிந்ததே.
இந்த கோவில் பக்தர் யாராவது ஒருவர் கனவில் வந்து உத்தரவு பெட்டியில் குறிப்பிட்ட பொருளை வைத்து முருகன் வணங்க சொல்வதாகவும் அந்த பக்தர் கோவிலில் வந்து சொல்லி அந்த குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து வணங்க உத்தரவு கேட்டு அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்படுகிறது.
அடுத்த பொருளை பக்தர்கள் கனவில் வந்து சொல்லும் வரை இந்த பொருளே தொடரும் என்பது நடைமுறை. இந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து வணங்குவதால் அந்த பொருள் சார்ந்த நல்ல விசயம் ஏதாவது நடக்கலாம் என்பது ஐதீகம்.
தற்போது கொங்கூர் பகுதியை சேர்ந்த பக்தர் சிவராம் கனவில் நெல் வந்ததை முன்னிட்டு அந்த பொருள் பூஜையில் வைத்து வணங்கப்படுகிறது.













