---Advertisement---

நம்பர் 1 ஸ்கூலாக மாறனும்… விபரீத ஆசையில் மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

தங்கள் பள்ளியை நம்பர் ஒன் பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில் இரண்டாம் வகுப்பு மாணவனை பள்ளி நிர்வாகம் நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

உத்திரபிரதேச மாநிலத்தில் டிஎல் பப்ளிக் ஸ்கூல் என்று தனியார் பள்ளியின் இயக்குனர் பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூடநம்பிக்கை சடங்குகளில் தீவிர நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்கள் பள்ளியின் பிசினஸ் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக சிறுவனை நரபலி கொடுத்தால் புகழ் கிடைக்கும் என்று நம்பி இருக்கிறார்கள்.

இதனால் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 11 வயதாகும் இரண்டாம் வகுப்பு மாணவனை கடவுளுக்கு நரபலி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை அதற்கு முயற்சி செய்து தோற்று நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலி கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவனை ஐவரும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள்.

சிறுவனை பள்ளி இயக்குனர் தனது காரில் மறைத்து வைத்திருக்கின்றார். கடந்த திங்கட்கிழமை முதல் சிறுவனை காணவில்லை என்று ஆசிரியர் தேடிய நிலையில் இந்த விவகாரம் போலீசுக்கு சென்றிருக்கின்றது. போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி இயக்குனரின் காரில் கழுத்தில் காயங்களுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் சிறுவனை பலி கொடுக்க இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து பள்ளி இயக்குனர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட வேறு யாருக்கும் விஷயம் தெரியுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.