---Advertisement---

கேட்கவே அருவருப்பா இருக்கு… மாட்டு இறைச்சி கொழுப்பு… திருப்பதி லட்டு விவகாரத்தில் சத்குரு சங்கடம்…!

By Sri
Published on: September 23, 2024
---Advertisement---

திருப்பதியில் லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான தகவல் மிகவும் அருவருப்பாக இருந்ததாக சத்குரு தெரிவித்து இருக்கின்றார்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதமான லட்டுக்களில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்பட்டது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குறைந்த விலையில் டெண்டர் விடப்பட்டு காசை மிச்சப்படுத்த இந்த முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

மாட்டு இறைச்சி கொழுப்பு கலந்த திருப்பதி லட்டு விவகாரம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்ததாவது ‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டு இறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது என்பது அருவருப்பானது.

இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் தான் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இன்றி பக்தர்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் எனக் கூறுகிறோம். பக்தியில்லாத இடத்தில் புனித தன்மை இருக்காது. பக்தியுள்ள இந்துக்கள் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று கூறியிருந்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த மதகுரு ஜக்கி வாசுதேவ் கோவையில் ஈஷா யோகா மையத்தை நிறுவி ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!