---Advertisement---

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சீரியல்! அட நம்ம ராமாயணம்தான்!

By Sri
Published on: May 2, 2020
---Advertisement---

மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ராமாயணம் நிகழ்ச்சி உலகளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் கைவசம் இருந்த எபிசோட்களை ஒளிப்பரப்பி வந்த தொலைக்காட்சி சேனல்கள் இப்போது புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் சில தொலைக்காட்சி சேனல்கள் பழைய பிரபலமான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் 90களில் தூர்தர்ஷனில் மிகவும் பிரபலமாக இருந்த ராமாயணம் சீரியல் ஏற்கனவே காலையும் மாலையும் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் மற்றொரு பிரபலமான தொலைக்காட்சி சீரியலான சக்திமான் மீண்டும் நாளையில் இருந்து ஒளிபரப்பப்பட உள்ளது. இதனால் 90ஸ் கிட்ஸ்கள் உற்சாகமாகியுள்ளனர்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒளிபரப்பப்பட்ட, ராமாயணம் உலகளவில் அதிக அளவில் பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கேம் ஆப் த்ரோன்ஸ் உருவாக்கி வைத்திருந்த 19.3 மில்லியன் பார்வைகளை (மே மாதம்) தாண்டியுள்ளது.

ஆம், டிடி நேஷனல் ஏப்ரல் 16 அன்று உலகம் முழுவதும் 77 மில்லியன் (7.7 கோடி) மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்பட அனைத்து தனியார் தொலைக் காட்சிகளையும் டிஆர்பியில் தூர்தர்ஷன் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.