---Advertisement---

ராமர் கோவில் திறப்பு எப்போது.

Published on: September 18, 2021
---Advertisement---

இந்தியாவில் நீண்ட கால பஞ்சாயத்தாக இருந்த விசயம் ராமர் கோவில் பாபர் மசூதி பிரச்சினைகள். நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த இந்த விசயம் கடந்த 2019 முதல் சுமூகமாகியுள்ளது.

எல்லா பிரச்சினைகளும் முடிந்து அனைவரும் சமரசம் ஆகி தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இரண்டு வருடங்களில் கொரொனா காரணமாக  சிற்சில தொய்வுகள் கட்டுமானப்பணிகளில் ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவிலின் அஸ்திவாரப்பணிகள் முடிந்துள்ளன.

கோயில் கட்டப்படும் இடத்தில் இருக்கும் மண்ணின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. எனவே அதிக ஆழத்துடன் அஸ்திவாரம் அமைத்தால்தான் கோயில் வலுவானதாக இருக்கும். அதன்படி, 400 அடி ஆழம் அஸ்திவாரம் தோண்டப்பட்டு சிமெண்ட் கலவை, சிறிய கற்கள், கட்டிடப் பொருட்கள் உள்ளிட்டவற்றால் நிரப்பப்பட்டது. தற்போது அவை 48 அடுக்கு கான்க்ரீட்டால் மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில் அஸ்திவாரப் பணிகள் வெற்றிகரமாக நிறை வடைந்திருக்கின்றன.

அடுத்தக்கட்டமாக, இந்த கான்க்ரீட் பூச்சின் மீது கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கர்நாடகாவில் இருந்து கிரானைட் கற்கள் கொண்டு வரப்படவுள்ளன. இனி கட்டுமானப் பணி வேகமாக நடைபெறும். வரும் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் புதிய ராமர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டு விடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க