---Advertisement---

இந்திய சினிமாவே ஆடித்தீர்க்கப் போகும் 30 நிமிட மரண மாஸ் போர்… ராஜமௌளி படத்தின் கதையை உடைத்த விஜயேந்திர பிரசாத்!

Published on: June 6, 2026
Director SS Rajamouli and writer Vijayendra Prasad setup details highlighting the 30-minute Rama vs Kumbhakarna war episode in Varanasi.
---Advertisement---

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஒட்டுமொத்தமாக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஒரே திரைப்படம் பிரம்மாண்ட இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌளி மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் “வாரணாசி” (Varanasi) தான். பான் இந்தியா மற்றும் சர்வதேச சாகசப் பாணியில் மிகவும் ரகசியமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் கதைக் களம் குறித்து தற்பொழுது இந்த படத்தின் கதையாசிரியரும், ராஜமௌளியின் தந்தையுமான கே வி விஜயேந்திர பிரசாத் ஒரு வெறித்தனமான அதிகாரப்பூர்வ உண்மையை உடைத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய விஜயேந்திர பிரசாத், வாரணாசி திரைப்படத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கப் போகும் ஒரு பிரம்மாண்டமான 30 நிமிட சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பலரும் அது என்ன மாதிரியான காட்சி என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அது ராமாயண இதிகாசத்தின் மிக உக்கிரமான போர்களில் ஒன்றான “ஸ்ரீ ராமர் மற்றும் கும்பகர்ணன்” ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் மரண மாஸ் யுத்தம் தான் என்பதை அவர் தற்பொழுது ஓப்பனாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும் (ராமர் அவதாரம்), மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ (கும்பகர்ணன் அவதாரம்) என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே வெளியான இதன் அறிமுகத் துண்டில் ராமர், ஆஞ்சநேயரின் வால் மற்றும் ரதம் ஆகியவை காண்பிக்கப்பட்ட நிலையில், இந்த 30 நிமிட ராமாயணப் போர் காட்சி ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைக்கப் போவது தற்பொழுது நூறு சதவீதம் உண்மையாகியுள்ளது. தற்பொழுது இந்த வெறித்தனமான செய்தி வெளியானதால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் செம குஷியிலும் மரண வெறியிலும் காத்துக்கிட்டு இருக்காங்க.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!