கவுண்டமணி காமெடியில் ஜாம்பவானகவே திகழ்ந்து வந்தார் தமிழ் சினிமாவில். இவருக்கு இன்று வரை ஏராளமான ஃபேன்ஸ் இருந்து வருகிறார்கள். யாருடன் இவர் சேர்ந்து நடித்தாலும் அந்த காம்போ வொர்க்-அவுட் ஆகிவிடும்.
செந்திலும் இவரும் சேர்ந்து அடித்த காமெடி லூட்டிக்கு ஒரு காலத்தில் அடிமைகளாகவே இருந்தார்கள் நகைச்சுவை பிரியர்கள்.
ஹீரோக்களுக்கு நிகரான மார்க்கெட்டை பிடித்து வந்திருந்தார் கவுண்டமணி. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு ரூபாய் சம்பளம் என நிர்ணயித்து வாங்கியவர். கடும் பிஸியாக இருந்தார் மனிதன் ஒரு நேரத்தில். ரஜினியுடன் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அது எல்லாமே ஹிட் தான்.
“16 வயதினிலே”வில் தொடங்கி “எஜமான்”, “மன்னன்” என எல்லா படங்களிலும் காமெடி ட்ராக் சூப்பர் ஹிட்டே.

ரஜினி இன்று வரை கோலிவுட்டின் உச்ச நடிகராகத்தான் இருந்து வருகிறார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்பீட் எடுக்கத்துவங்கிய ரஜினியின் சினி கேரியர். இன்று வரை அதே வேகத்தில் தான் இருந்து வருகிறது. ரஜினி கால்ஷீட் கிடைப்பது என்பது அரிதாக இருந்து தான் வருகிறது. இப்பேர்ப்பட்ட ரஜினியே கவுண்டமணியின் கால்ஷீட்டிற்காக காத்திருந்திருக்கிறார் ஒரு நேரத்தில்.
கவுண்டமணி வெறும் மூன்று மணி நேரங்கள் ஃப்ரீயாக இருந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரஜினி இனி விட்டால் அவரை இனி பிடிக்க முடியாது அது சிரமமாகிவிடும் என நினைத்து தான் நடித்து கொண்டுருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கவுண்டமணியுடன் கமிட் ஆகி இருந்த படத்தில் நடிக்க சென்றிருக்கிறார்.
சூப்பர் ஸ்டாராக இருக்கும் போதிலும் கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்க தன்னுடைய நேரத்தை அட்ஜஸ்ட் செய்து கொடுத்து நடித்திருக்கிறார் ரஜினியே.













