---Advertisement---

வெள்ளை நிற உணவுகளுக்குத் தடை! ‘ஜெயிலர் 2’ செட்டில் ரஜினியின் சீக்ரெட் டயட்: மிர்பனா ஓபன் டாக்!

By Sri
Published on: October 12, 2026
Editorial visual featuring Mirnaa discussing Rajinikanth's daily routine.
---Advertisement---

இன்றைய நவீன சினிமா உலகில் கொஞ்சம் வெற்றி பெற்றுவிட்டால் போதும், ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கித் தம் உடல்நலனைக் கெடுத்துக்கொள்ளும் இளம் நடிகர்கள் மத்தியில், 70 வயதைக் கடந்தும் சூப்பர் ஸ்டாராகவே கோலோச்சும் ரஜினிகாந்த் (Rajinikanth) ஏன் இன்றும் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கிறார் என்பதற்குச் சான்றாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ (Jailer) திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த நடிகை மிர்னா (Mirnaa), ரஜினியின் அசைக்க முடியாத தன்னடக்கம் மற்றும் அன்றாட கட்டுப்பாட்டு முறைகள் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

மேலும் நடிகை மிர்னா (Mirnaa) கூறுகையில், ரஜினி முற்றிலும் சுத்த சைவ உணவுகளை மட்டுமே உண்பவர் என்றும், காரசாரமான மசாலா பொருட்கள் மற்றும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் ‘வெள்ளை நிற உணவுகளான’ அரிசி, பால், தயிர், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைத் தனது உணவில் முற்றிலும் தவிர்த்து மிகக் கடுமையான டயட்டைப் பின்பற்றி வருகிறார் என்றும் மிர்னா தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கு வரும்முன் அதிகாலையிலேயே ஓட்டம், நீச்சல், டிரெட்மில் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, செய்தித்தாள் வாசிப்பது வரை ஒரு ராணுவ வீரன் போன்ற ஒழுக்கத்தை அவர் கடைப்பிடிக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கிராமத்து ரோல்களுக்கு பிரேக்... 2015 சென்னை பெருவெள்ளக் கதையில் சிட்டி பையனாக மிரட்ட வரும் சூரி!

மலைப் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது ரஜினியின் அறைக்கு அருகிலேயே தங்கியிருந்த மிர்னா, தினமும் காலையில் அவரை நேரில் பார்த்த அனுபவத்தையும், ரஜினியின் ஆன்மீகப் பேச்சுகள் மற்றும் ‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) போன்ற சர்வதேசத் தொடர்களை அவர் ரசித்துப் பார்க்கும் இளமையான மனநிலையைப் பற்றியும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வெறும் பந்தாக்களுக்காக வாழாமல், உடலையும் மனதையும் இவ்வளவு கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதால்தான், தலைமுறைகள் கடந்தும் ரஜினியால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடிகிறது என்பதைச் வளரும் நடிகர்கள் இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Warm golden spotlight inside a South Indian cinema studio representing actor Rishikanth's interview on Superstar Rajinikanth and building his own identity.

“ஒட்டுமொத்த உலகத்திற்கே அவர்தான் ப்ளூபிரிண்ட்… ரஜினிகாந்த் சாரோடு ஒப்பிடுவது மகிழ்ச்சி, ஆனால் எனக்கென தனி அடையாளம் வேண்டும்!” – மனம் திறந்த நடிகர் ரிஷிகாந்த்!

Vibrant South Indian retro dance stage lights and festive comedy energy representing the Moonwalk trailer starring Prabhu Deva and AR Rahman.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி… காமெடி, டான்ஸ் கலாட்டாவுடன் வெளியானது ‘மூன்வாக்’ டிரெய்லர்!

Crowded South Indian multiplex theater lobby at evening representing the box office ticket sales milestone of Suriya's Scene.

2026-ன் டாப் 5 பட்டியலில் சூர்யாவின் 3 படங்கள்… ‘கருப்பு’, ‘சீன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் மாயாஜாலம்!

Neon twilight street scene with eerie green fog and comedic thriller atmosphere representing Santhanam's zombie comedy Love Bite.

ஜாம்பி பராக்கு… அபர்ணா தாஸ் உடன் சந்தானம் நடித்துள்ள ‘லவ் பைட்’ எப்போது திரைக்கு வருகிறது?

Atmospheric South Indian music studio console and cinema clapperboard representing Ken Karunaas and Sai Abhyankkar's two-film collaboration.

அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணையும் கென் கருணாஸ் – சாய் அபயங்கர் கூட்டணி… வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ முதல் செல்ல அய்யாவு படம் வரை!

Warm nostalgic South Indian rain-washed courtyard at twilight representing Mani Ratnam's realistic family romance Inji Vellam.

மணிரத்னம் சகோதரர் சீனிவாசனின் நிஜ வாழ்க்கை சம்பவமா? விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் சுவாரசியப் பின்னணி!