---Advertisement---

பாஜகவின் கொள்கையால் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதிப்பு…ராகுல் காந்தி ஆவேசம்…

Published on: July 16, 2024
Rahul Gandhi
---Advertisement---

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தோடா பகுதியில் நடந்த சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிட்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் நடந்துள்ள மற்றொரு தாக்குதலால் நமது ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலியையும், அவர்களது குடும்பத்தாருக்கு  ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Military file Picture
Military file Picture

பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலை அளிக்கிறது என்றுள்ளார். ஜம்மு – காஷ்மீரின் மோசமான நிலையை இந்த தாக்குதல்கள் வெளிப்படுத்துவதாக தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அதோடு நமது ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பங்களும் பாரதிய ஜனதாவின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும், மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். நாட்டுக்கும், ராணுவ வீரகளுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனின் கோரிக்கையாக உள்ளது.

இந்த துயரமான நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது என்றுள்ளார்.   ஜம்மு – காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அரசின் மீதான தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக ராகுல் காந்தி.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!

Director Cibi Chakaravarthi and actor Chiyaan Vikram

இது ‘டான்’ இயக்குனரின் அடுத்த பிளான்! சீயான் விக்ரமுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி.. ‘சீயான் 64’ படத்திற்கான அதிரடி கதைகளம் தயாராகிறதா?

Suriya and director TJ Gnanavel with the Hombale Films team for the official announcement of Suriya48.

இது சூர்யாவின் அடுத்த கட்டம்! ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ உடன் இணையும் சூர்யா48.. ‘ஜெய் பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது!

Suriya in a police role for Jithu Madhavan's upcoming film Suriya 47

இதுதான் சூர்யா 47-ன் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை? – மனம் திறந்த இயக்குநர் ஜித்து மாதவன்!

Jr NTR as Lord Murugan in the upcoming mythological epic God of War directed by Trivikram Srinivas.

இது தெய்வீக சர்ப்ரைஸ்! ‘காட் ஆஃப் வார்’ படத்தில் முருகப்பெருமானாக ஜூனியர் என்டிஆர்.. திரிவிக்ரம் இயக்கும் பிரம்மாண்ட புராணக் காவியம் இதோ!