மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியிருக்கின்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கும் ஒப்பந்தம் தகுதி இல்லாத ஆர் எஸ் எஸ் காரருக்கு கொடுக்கப்பட்டதா? இந்த முறை கேட்டில் நடந்த ஊழலுக்கு என்ன வருத்தம் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.
சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரத்தில் சிவாஜியிடம் மட்டும் மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது. மகாராஷ்டிரா மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லா ஒப்பந்தங்களையும் அம்பானிக்கும் அதானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது? இங்கு ஆட்சி நடக்கின்றதா? இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்.
போராட்டங்கள் நடத்தியதால் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவில்லை. பண மதிப்பு நீக்கம், தவறான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். சிறு குறு தொழில்கள் இரண்டு பேரில் நலனுக்காக முடிக்கப்பட்டன.
அதானி, அம்பானி குழுக்களால் வேலைவாய்ப்பு உருவாக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சித்தாந்தத்தின் அடித்தளமும் டிஎன்ஏவும் இருக்கின்றது. நாங்கள் சமூக முன்னேற்றத்தை விரும்புகிறோம். அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட சிலரின் வளர்ச்சியை பாஜக விரும்புகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.













