---Advertisement---

வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள்… ராகுல் காந்தி கொடுத்த உறுதி…!

By Sri
Published on: August 2, 2024
---Advertisement---

வயநாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கற்றுக் கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்திருக்கின்றார்.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்தார்கள். வயநாட்டில் தங்கி இருந்த இவர்கள் இன்று காலையில் வயநாட்டில் உள்ள ரெசாட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே சி வேணுகோபால், கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்ட பலரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று விவாதித்த போது காங்கிரஸ் சார்பில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் கற்றுக் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

இடம் வாங்கி அதில் குடியிருப்பு போல் வீடுகள் கட்டவும், ஒவ்வொரு வீடும் தலா எட்டு இலட்சம் முதல் 10 லட்சம் செலவில் கட்டப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு ராகுல் காந்தி கலெக்டரை சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்டுப் பணியை பற்றியும் கேட்டறிந்தார். காங்கிரஸ் குடும்பத்தினர் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க