தமிழ்நாடு திமுக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் பி.டி தியாகராஜன். இவர் மதுரையை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் மகனாவார். இவர் சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவரை மணம் முடித்துள்ளார்.
நேற்று இவரின் திருமண நாள் ஆகும். தனது திருமண நாள் அன்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் அமைச்சர்.
பணி நிமித்தம் காரணமாக என் திருமண நாளான இன்று என்னை வாழ்த்திய பல நல்ல உள்ளங்களுக்கு என்னால் தனித்தனியே நன்றி தெரிவிக்க இயலவில்லை. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் அமைச்சர்.













