---Advertisement---

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் இளையராஜா வேதனை- வக்கீல் தகவல்

Published on: December 28, 2020
---Advertisement---

இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகளாக பலவிதமான சினிமா பாடல்களை கம்போஸ் செய்த இடம்தான் பிரசாத் ஸ்டுடியோ. தற்போதைய நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவை காலி செய்வதில் தகராறு ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது.

அங்கு ஒரு நாள் தியானம் செய்ய வேண்டும் அங்கு நான் செல்ல வேண்டும் என இளையராஜா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்

பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் நீதிபதி அனுமதி அளித்த நிலையில்

இன்று காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் கூறப்பட்டது ஆனால், இளையராஜா வரவில்லை.

அவருடைய வழக்கறிஞர்கள் மட்டுமே வந்தனர் இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் இளையராஜா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் கூறுகின்ற நிலையில்

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியது

“இளையராஜா அறையின் சாவி அவரிடம் உள்ளது. ஆனால், இன்று காலை வந்து பார்த்தால் அந்த அறையே இல்லை. அந்த அறை தகர்க்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுடைய பிரத்யேக அறையே இல்லை. அது இருந்ததிற்கான சுவடே இல்லை என்பதை இளையராஜாவிடம் தெரிவித்தோம். இதைக் கேட்டவுடன் அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார்.

‘அந்த அறையையும், அதிலிருக்கும் பொருட்களையும் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் வரவேண்டும் என்று சொன்னேன். அந்த அறையே இல்லை என்று சொன்னால், நான் அங்கு வந்து என்ன செய்வது, எனக்கு மனவேதனை அதிகமாகும். என்னால் தாங்கிக்கொள்ள இயலாது’ என்று இளையராஜா கூறினார். இதனால் அவர் வரவில்லை.

இங்கு ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளிட்ட 5 அறைகள் உள்ளன. அவருடைய பத்ம விபூஷண் விருது கூட அந்த அறையில்தான் உள்ளது. அந்த அறைக்குத்தான் அனுமதி மறுத்துவிட்டார்கள்.

மிக முக்கியமான இசைக் குறிப்புகள், புகைப்படங்கள், விருதுகள் என அத்தனையும் குடோனில் போட்டு வைத்திருப்பதை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று இளையராஜாவுடன் ஆலோசித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!