---Advertisement---

திருநள்ளாறில் பாமக செயலாளர் கொலை- பதற்றம்

Published on: October 23, 2021
---Advertisement---

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருப்பவர் தேவமணி. திருநள்ளாறு சாலையில் சுரக்குடி என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் அருகில் உள்ள திருநள்ளாற்றில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டபோது வீட்டினருகே மர்மநபர்கள் சிலரால் வழிமறித்து வெட்டப்பட்டார்

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தேவமணியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர்  உயிரிழந்தார்

இதனால் புகழ்பெற்ற திருநள்ளாறில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.