நாளை அக்டோபர் 30 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்கிறது. வருடா வருடம் நடக்கும் இந்த நிகழ்வில் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வர்.
எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு கட்டாயம் வருகை புரிந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான அமமுக நிர்வாகியுமான சசிகலா மதுரையில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றுள்ளார் சசிகலா.













