---Advertisement---

ரூபாய் 12,000-க்கு டிக்கெட்… ட்ரெயின் முழுக்க குப்பை… பயணி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்…!

By Sri
Published on: August 22, 2024
---Advertisement---

ராஜஸ்தானி விரைவு ரயில் பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலில் இருக்கும் குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் ராஜஸ்தானி விரைவு ரயில் இது. இந்த ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகின்றது. இது எங்களின் மகிழ்ச்சியான பயணத்தை கெடுக்கின்றது.

சாதாரண ரயில் பெட்டிகளை விட பாத்ரூமின் நிலை மிக மோசமாக இருக்கின்றது. நான் 12 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன். சுத்தம் என்பதே இல்லை. ரயில் பெட்டிகளுக்குள் அனுமதி இல்லாமல் சிலர் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கிறார்கள். மொத்தத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு நிலை கிடையாது.

ரயிலில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் எனது மகன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். பிரதமர் மோடி அவர்களை தயவுசெய்து இதை சரி செய்யுங்கள்” என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவில் இந்திய ரயில்வே துறை ரயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை அவர் டேக் செய்திருக்கின்றார். இந்த பதிவிற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளார். அதில் ரயில்வே உங்கள் புகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க