---Advertisement---

‘நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கட்டும்’… தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை…!

By Sri
Published on: August 21, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்கின்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கின்றார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன்படி வருகிற 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

இருப்பினும் கட்சியின் கொடி சின்னம் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.15 மணிக்கு ஒரே ஊரில் நடக்கும் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும் விழாவில், தமிழக முழுவதிலும் இருந்து சுமார் 250 நிர்வாகிகள் பங்கேற்கவாக இருக்கிறார்கள். பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் அறிமுகம் செய்யும் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியில் சமத்துவத்தை போற்றும் வகையில் லோகோ இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ள நிலையில் அதை மையமாக வைத்து தான் லோகோ தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. விஜய் கட்சி கொடியில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இடம்பெருமா? அல்லது சமத்துவத்தை குறிக்கும் லோகா இடம் பெறுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.