ஓணம் மற்றும் ஆவணி மாத சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் தினசரி 15000 பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இக்கோவில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
பின்பு நேற்று 8மணி அளவில் நடை அடைக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
காலை 5.55 மணியளவில் நெற்கதிர்களால் நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெற்றன.








