---Advertisement---

ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பா- அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

Published on: December 2, 2021
---Advertisement---

உலக அளவில் ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இது பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டில் இருந்து கொரோனாவால் தொடர் பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

லேசாக அதில் இருந்து முன்னேறி வரும் வேளையில் திரும்ப அடுத்தடுத்த வைரஸ்கள் வந்து லாக் டவுணை அறிவித்து விடுகின்றன.

இந்த வருட ஆரம்பத்தில் டெல்டா வைரஸ் உருமாறிய கொரோனாவாக வந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் ஓமிக்ரான் என்ற வைரஸ் அதை விட உருமாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பரிசோதனைகள் உலகெங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் உள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”11 நாடுகளில் இருந்து வந்த 477 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை நடத்தியதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.