---Advertisement---

தவழ்ந்து வந்தா பென்ஷன்… மூதாட்டியை சித்திரவதை செய்த அரசு அதிகாரி… வைரல் வீடியோ…!

By Sri
Published on: September 24, 2024
---Advertisement---

ஒடிசா மாநிலத்தில் பென்ஷன் வாங்க 80 வயது மூதாட்டியை 2 கிலோமீட்டர் தவழ்ந்து செல்ல வைத்த கொடூரம் அரங்கேறி இருக்கின்றது.

ஒடிசா மாநிலம், கியான்ஜ்கர் பகுதியில் ரைசுவான் என்ற கிராமத்தை சேர்ந்த 80 வயதான மூதாட்டி பதூரி மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதியம் பெற்று வந்திருக்கின்றார். வயது மூப்புடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகின்றது.

அதிகாரி மூதாட்டியை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்குமாறு கூறியிருக்கின்றார். மிகுந்த ஏழ்மையில் வாடும் மூதாட்டி அன்றாட தேவைகளுக்கு பென்ஷன் பணத்தை மட்டுமே நம்பி இருக்கின்றார். தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல புறப்பட்டார்.

அவருக்கு வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மூதாட்டி பதூரியால் நடக்க முடியவில்லை. இதனால் 2 கிலோமீட்டர் அவர் தவழ்ந்தே சென்று பென்ஷன் பணம் வாங்கி வந்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதத்தில் இருந்து மூதாட்டிக்கு வீட்டுக்கே சென்ற பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!