சமீப காலமாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பல முன்னணி தலைவர்கள் பலருக்கும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.
இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், முக கவசம் அணியாதவர்களை உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும், அலுவலகத்தில் முக கவசம் அணியாதவர்கள் அலுவலகத்தை விட்டு செல்லுமாறும் கூறியுள்ளது.
2 பேருக்கு இடையே 2 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.













