நிபா வைரஸ் தாக்கத்தால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் அது பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் பரவும் முறை பற்றி வல்லுநர்கள் குழு கூறுவதாவது.
நிபா வைரஸ் தாக்குதல் முதன் முதலில் 1998ம் ஆண்டில் காம்புங் சுங்காய் நிபா என்ற ஊரில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம் அதனால் நிபா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காற்றின் மூலம் இது பரவுவதில்லையாம் மரத்தில் கட்டி வைக்கப்படும் கள் பானைகளில் இது பரவுகிறதாம் , மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் மூலமும் பன்றிகள் மூலமும் இது பரவுவதாக கூறப்படுகிறது.
எனவே இவைகளில் இருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகும்.













