---Advertisement---

பனிச் சுமையால் உயிரிழந்த மகள்… தாயார் எழுதிய உருக்கமான கடிதம் வைரல்…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

பனிச்சுமை காரணமாக மகள் உயிரிழந்த நிலையில் தாயார் அந்த நிறுவனத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் எர்னெஸ்ட் அண்ட் & யங் என்ற நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வேலைக்கு சேர்ந்தார். கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் அவரின் அறையில் தற்கொலை செய்து உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு கார்ப்பரேட் ஊழியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அன்னா செபாஸ்டியன் மரணத்திற்கு அவர்களின் அலுவலகத்தில் கொடுத்த பணிச்சுமை தான் காரணம் என்று அவரின் தாயார் அனிதா எர்னெஸ்ட் அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மொமாடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அதில் அன்னாவிற்கு இதுதான் முதல் வேலை. உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அவர் மிகுந்த ஆர்வமுடன் இருந்தார். ஆனால் நான்கு மாதங்களில் பனிச் சுமையால் அவர் உயிரிழந்தார்.

இரவு நீண்ட நேரமும் வார இறுதி நாட்களில் அவர் அதிக வேலை செய்திருக்கின்றார். பெரும்பாலான நாட்கள் மிக சோர்வுடன் தான் வீட்டுக்கு திரும்பினார். புதிதாக வேலை சேர்ந்தவர்களுக்கு முதுகெலும்பு உடையும் அளவுக்கு பணிகள் கொடுக்கப்படுவது என்ன நியாயம்? பள்ளி மற்றும் கல்லுரிகளில் அன்னா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். சிஏ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்.

உங்கள் நிறுவனம் கொடுத்த அனைத்து வேலைகளையும் அவர் சிறப்பாக செய்தார். இருப்பினும் பனிச்சுமை அவரை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதித்திருக்கின்றது. இந்த நிறுவனத்தில் சேர்ந்த பல ஊழியர்கள் பணிச்சுமை தாங்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அன்னாவின் மேலாளர் பணி நேரம் முடிந்த பிறகும் அவர்களிடம் நிறைய வேலை வாங்கி இருக்கின்றார் .கூடுதல் நேரம் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிய வைத்திருக்கிறார்கள். அன்னாவின் இறுதி சடங்குக்கு கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேனேஜருக்கு தகவல் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. எனது மகளின் உயிரிழப்பு அந்த நிறுவனத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.

நாங்கள் அடைந்த துயரமும் அதிர்ச்சியும் வேறு குடும்பத்தால் தாங்க முடியாது” என்று தெரிவித்திருக்கின்றார். அன்னாவின் தாயார் எழுதிய கடிதமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் அந்த நிறுவனத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் இதனை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!