---Advertisement---

வதந்தியை நம்பிய மக்கள் – ஈரானில் நூற்றுக்கணக்கானோர் பலி!

By Sri
Published on: March 28, 2020
---Advertisement---

மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற போலியான செய்தியை நம்பிய 100 கணக்கான ஈரான் மக்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இப்போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அபாயகரத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு ஈரான். அங்கே இதுவரை 2400 பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மெத்தனால் கலந்த ஆல்கஹாலைக் குடித்தால் கொரோனா பரவாது என்பதை நம்பி குடித்த 1000 பேருக்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கோவிட் 19 ஆல் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்துள்ள நிலையில் இப்போது இந்த சம்பவம் அங்குள்ளவர்களை மேலும் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!

யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுவதை அறிவிக்கும் போஸ்டர். / Official poster announcing the trailer launch event for the Yash starrer 'Toxic' in Bengaluru on August 8.

Massive Excitement Builds Up: யஷின் ‘டாக்சிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!