---Advertisement---

குரங்கு மீது பாசம் வைத்ததால் உயிரியல் பூங்கா வர பெண்ணுக்கு தடை

Published on: August 26, 2021
---Advertisement---

ஆறறிவுள்ள மனிதன் போலவே ஐந்தறிவுள்ள மிருகங்களும் மனிதர்கள் மீது அளவு கடந்த பாசம் வைக்கிறது. பலர் அதை புரிந்துகொள்வதில்லை.

பெல்ஜியம் நாட்டில் ‘ஆன்ட்வெர்ப்’ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, 38 வயதில் ஆண் மனித குரங்கான சீடா என்ற குரங்கு உள்ளது இவற்றுடன் ஏராளமான குரங்குகளும் உள்ளன.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை அச்சுறுத்த  கூடாது என்பதற்காக, இவை கண்ணாடி கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காவிற்கு அடிய் டிம்மர்மேன்ஸ் என்ற பெண் அடிக்கடி வந்து விலங்குகளை பார்வையிட்டு செல்வார்.  இந்த மனித குரங்கான சீடாவுடன் அவர் சைகை  மூலமாக பேசத் தொடங்கினார். இவருக்கும் சீடாவிற்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது. இதனால், மற்ற  குரங்குகளுடன் சேர்வதை சீடா தவிர்த்து விட்டது. அடிக்கடி அந்த பெண் அங்கு வரத்தொடங்கினார் பல மணி நேரம் சீடாவுடன் செலவிடுவார்.

இடையே கண்ணாடி  இருந்த போதிலும் இருவரும் மாறி மாறி முத்தமழை பொழிந்து கொண்டுள்ளனர். மேலும், பூங்காவிற்கு வரும் மற்ற பார்வையாளர்களை சீடா கண்டுகொள்வது இல்லை. அதிகபட்சமாக ஒரு நாள் சுமார் 15 மணி நேரம் சீடாவும், அடிய்யும் தனிமையில் செலவழித்துள்ளனர். அடிய்யின் இந்த நெருங்கிய உறவின் காரணமாக, பூங்காவிற்கு வரும் மற்ற பார்வையாளர்களுடன் சீடா நடந்து கொள்ளுவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பூங்கா நிர்வாகிகள் அச்சமடைந்தனர். இதனால், பூங்காவுக்கு வர வேண்டாம் என அடிய்க்கு அவர்கள் தடை விதித்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.