---Advertisement---

மீனவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா..?

By Sri
Published on: August 1, 2024
---Advertisement---

இலங்கைக்கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ராமநாதபுரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் தெரிவித்திருந்ததாவது “ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலை சாமி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய நால்வரும் இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரோந்து படகு மோதியதில் கடற் படையினரின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப்படகு சேதம் அடைந்து நீரில் மூழ்கியது. இதில் மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகின்றார். தமிழக அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும் நேரில் மத்திய அரசை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இது போன்ற உயிரிழப்புகளும் நேருகின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.