---Advertisement---

மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை… அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்…!

By Sri
Published on: September 18, 2024
---Advertisement---

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முதல் நிர்வாகி உடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆர் ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் ஏ வ வேலு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தார்கள்.

தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம், துணை முதல் அமைச்சர், புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் பலரும் குவிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இளைஞரணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் திமுக பவள விழா கூட்டம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். திமுக தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறீர்கள். துணை முதல்வர் பொறுப்பு குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார். அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். தமிழகத்தில் பெரியவரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்று விஜய் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual revealing Srinidhi Shetty's screen test details for Nitesh Tiwari's Ramayana.

ராமாயணம் படத்தில் சீதா வேடம்: யஷ் ராவணனாக நடித்ததால் விலகிய ஶ்ரீநிதி ஷெட்டி – வெளியான சுவாரஸ்ய தகவல்!

Editorial visual announcing the collaboration between director Ravi Arasu and producer Vetrimaaran.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!

Editorial graphic highlighting G.V. Prakash sharing the viral video of a little girl singing Neno Butterfly.

நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!