---Advertisement---

மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: October 3, 2024
---Advertisement---

திண்டுக்கல் மாவட்டம் அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனா முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி ஸ்டெல்லா இவரும் ஜம்புளியம்பட்டி அருகே ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஒரே மகள் இருக்கிறார்கள்.

இவர்களின் மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த திருமணத்திற்காக ஜவுளி எடுப்பதற்கு குடும்பத்துடன் திருச்சி சென்று இருக்கிறார்கள். இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பகுதியில் மொத்தம் பத்து வீடுகள் மட்டுமே இருக்கின்றது. ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதை கவனித்தும் அவர்கள் வீட்டில் திருமணம் இருப்பதை கவனித்த கொள்ளையர்கள் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!