---Advertisement---

Mammootty Lokah Moothon : “அந்தக் கை என்னோடது இல்ல” – லோகா படத்தில் நடித்தது குறித்து மம்மூட்டி அதிரடி விளக்கம்!

Published on: April 12, 2026
Malayalam superstar Mammootty during an interview discussing his voice role as Moothon in the Lokah film franchise.
---Advertisement---

மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி இப்போ இருக்குற இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்குற அளவுக்கு செம பிஸியா நடிச்சுட்டு வராரு. சமீபத்துல அவரோட பையன் துல்கர் சல்மான் தயாரிப்புல கல்யாணி பிரியதர்ஷன் நடிச்சு ரிலீஸ் ஆன ‘லோகா: சாப்டர் 1’ படம் ஒரு மாபெரும் ஹிட் அடிச்சது. இந்தப் படத்துல மம்மூட்டி ‘மூத்தோன்’ அப்படிங்கிற ஒரு பவர்ஃபுல் கேரக்டருக்கு வாய்ஸ் குடுத்துருப்பாரு. ஆனா இப்போ அந்தப் படத்துல நடிச்சது பத்தி மம்மூட்டி குடுத்த ஒரு பேட்டி தான் இப்போ சோசியல் மீடியாவுல செம வைரல்.

மம்மூட்டி அந்தப் பேட்டியில என்ன சொல்லிருக்காருன்னா, “நிஜமா சொல்லணும்னா நான் அந்தப் படத்துல இருக்குறதே எனக்கு முதல்ல தெரியாது. ‘வேண்டாம்’ அப்படிங்கிற ஒரே ஒரு டயலாக் மட்டும் தான் பேசச் சொன்னாங்க. நானும் சரி அப்படின்னு சொல்லி வாய்ஸ் குடுத்தேன். படத்துல காட்டுற அந்த ஒரு கை கூட என்னோடது கிடையாது. படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் தான் அது ‘மூத்தோன்’ கேரக்டர்னும், அதுக்கு நான் தான் வாய்ஸ் குடுத்துருக்கேன் அப்படின்னும் என்கிட்ட சொன்னாங்க” அப்படின்னு ஜாலியா சொல்லிருக்காரு.

தன்னை ஏமாத்தி தான் இந்த கேரக்டர்ல நடிக்க வெச்சுட்டாங்கன்னு மம்மூட்டி இப்போ சிரிச்சுக்கிட்டே சொல்றது ரசிகர்கள ரசிக்க வெச்சுருக்கு.

இப்போ லோகா படத்தோட அடுத்தடுத்த பாகங்கள் வரப்போற நிலைமையில, அதுல மம்மூட்டி நடிப்பாருன்னு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. இது பத்தி கேட்டப்போ, “இப்போ அதுல நடிக்கிறது என்னோட பொறுப்பாகிடுச்சு. ஆனா அடுத்தப் பாகங்கள்ல நான் நடிக்கணும்னா அவங்க முதல்ல என்னை கன்வின்ஸ் பண்ணனும். முக்கியமா என்னோட சம்பள விஷயத்துல அவங்க சரியா இருந்தா மட்டும் தான் நான் நடிப்பேன்” அப்படின்னு அவரோட ஸ்டைல்ல ஒரு மாஸ் பதில் குடுத்துருக்காரு.

2026-ஓட மிகப்பெரிய ஃபேண்டஸி சினிமாவா பார்க்கப்படுற லோகா யுனிவர்ஸ்ல மம்மூட்டியோட மூத்தோன் கேரக்டர் தான் கதையோட பெரிய பலமா பார்க்கப்படுது. ஏற்கனவே சூர்யாவோட ‘கருப்பு’ படம் மே மாசம் வரப்போற நிலைமையில, மம்மூட்டியோட இந்த லோகா அப்டேட் கேரளா மட்டும் இல்லாம தமிழ்நாட்லயும் பெரிய அளவுல பேசப்படுது. மம்மூட்டி இப்போ மகேஷ் நாராயணன் இயக்கத்துல மோகன்லால் கூட சேர்ந்து ‘பாட்ரியாட்’ படத்துலயும் பிஸியா இருக்காரு.

சம்பள விஷயத்துல கரெக்டா இருந்தா லோகா அடுத்த பாகத்துல மூத்தோனா மம்மூட்டிய நேரடியா பார்க்கலாம்.

இந்த ‘மூத்தோன்’ கதாபாத்திரம் லோகா யுனிவர்ஸோட ஒரு முக்கியமான புள்ளி. மம்மூட்டியோட வாய்ஸ் அந்த கேரக்டருக்கு ஒரு பயங்கரமான வெயிட்டேஜ் கொடுத்துருந்துச்சு. இப்போ அவரே நேரடியா ஸ்கிரீன்ல வரப்போறாருன்னு தெரிஞ்சதும் துல்கர் சல்மான் ரசிகர்களும் மம்மூட்டி ரசிகர்களும் செம குஷியில இருக்காங்க. துல்கர் தன்னோட அப்பாவையே இப்படி ஒரு மாஸ் யுனிவர்ஸ்ல கொண்டு வந்தது பெரிய மாஸ்டர் பிளான்னு கோலிவுட் வட்டாரத்துல பேசுறாங்க.

மம்மூட்டியோட இந்த எதார்த்தமான பேட்டி இப்போ இணையத்துல தீயா பரவிட்டு இருக்கு. பையன் தயாரிக்குற படத்துல நடிக்கிறதுக்கு சம்பளம் கேக்குற அந்தத் நேர்மை தான் மம்மூட்டி. அடுத்த பாகத்துல மூத்தோனோட முகத்தை பாக்குறதுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கு. லோகா சாப்டர் 2-வோட வேலைங்க இப்போவே சூடுபிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

New official flag unveiled by the All India Dhanush Fan Club.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்! புதிய கொடியை அறிமுகப்படுத்திய அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்!

Engal Thangam movie poster showing the lead actress.

‘எங்கள் தங்கம்’ வெற்றிக்குப் பின்னால் இருந்த கசப்பான உண்மை! ஹீரோயின் படங்களை ஏன் புறக்கணித்தனர்? தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!