Latest News
ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!
ஆந்திர மாநிலத்தில் 4 பெயரை சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த சீரியஸ் கில்லர் பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆந்திர பிரதேசம் மாநிலம், தெனாலியில் 4 பேரை சைனைட் கலந்து குளிர் பானத்தை குடிக்க வைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா என நடுத்தர பெண்மணிகள் 3 பேர் தெனாலி பகுதியில் உள்ளவர்களை குறி வைத்து அவர்களிடம் நட்பாக பேசி பின்னர் சயனைடு கலந்த குளிர்பானங்களை குடிக்க வைத்திருக்கிறார்கள்.
அதை குடித்தவர்கள் சிறிது நேரத்தில் உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் பொருட்களை திருடி சென்று இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உயிர் பிழைத்தவர்கள் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்திய ஆந்திரா போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.
இவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த பெண்களுக்கு சைனைடு சப்ளை செய்து வந்த நபரையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இந்த மூவரில் 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்ற நபர் நான்கு வருடங்களுக்கு முன்பு கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடத்திற்கு முன்பு தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேருக்கு சயனைடு கொடுத்து கொலை செய்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.