---Advertisement---

கரோனா வைரஸால் பாஜக எம்பி உயிரிழப்பு

Published on: September 18, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் அரசியல்வாதிகளையும் யாரையும் விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் சமீபத்தில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

நேற்று முன் தினம் திருப்பதி தொகுதியின் எம்.பியான ஆளும் ஜகன் மோகன் கட்சியை சேர்ந்த துர்கா பிரசாத் உயிரிழந்தார்.

தற்போது கர்நாடகாவில்

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரை சேர்ந்த அசோக் கஸ்தி என்பவர் உயிரிழந்தார். தன்பள்ளி காலத்திலேயே இவர் ஆர்எஸ்எஸ்அமைப்பில் சேர்ந்தவர்.

கல்லூரியில் படிக்கும் போது ஏபிவிபி அமைப்பில் தீவிரமாக இயங்கினார் இவர் பின்பு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 22-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அசோக் கஸ்திக்கு கடந்த 2-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்

ஏற்கெனவே இவருக்கு இதயம், சிறுநீரகக் கோளாறும் இருந்ததால் உடல்நிலை மோசமானது. நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக சுவாச‌ப் பிரச்சினை இவருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்ததால் நேற்று பிற்பகல் அசோக் கஸ்தி சிகிச்சை  உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் அரசியல்வாதிகள், முன்னணி சினிமா கலைஞர்கள் என பலரும் உயிரிழந்து வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!