தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, மற்றும் கேரள பார்டரை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. முக்கியமாக கேரளா,தேனி, கன்னியாகுமரி போன்ற கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து பெருமளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இரண்டு வருடங்களாக கொரோனா குழப்பங்களால் கேரளாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று முதல் நீண்ட இடைவேளைக்கு பிறகு கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.







