---Advertisement---

ஜெயம் ரவியின் 25வது பட டீசர் – இணையத்தில் ட்ரெண்டிங்

By Sri
Published on: March 10, 2020
---Advertisement---

ஜெயம் ரவியின் 25வது படமான பூமி வரும் மே மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டது என்று கூறப்படுகின்றது.

லக்ஷ்மன் இயக்கத்தில் டி.இமான் இசையமைக்க ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இதில் நிதி அகர்வால்(Nidhhi Agerwal) நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி தனது ட்விட்டரியில் பூமி படத்தின் டீசர் விடியோவை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் உள்ளனர்.

டீசர்ரில் விவசாயத்தின் தற்போதைய நிலையை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் காணமுடிகின்றது. கோமாளியை தொடர்ந்து கண்டிப்பாக ஜெயம் ரவியின் ஹிட் வரிசையில் பூமிக்கும் இடமுண்டு.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நடிகர் ரவி மோகன் உடனான உறவு: கெனிஷா பிரான்சிஸின் வைரல் பிறந்தநாள் பதிவு மற்றும் உருக்கமான விளக்கம்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.