தமிழகத்தில் 60கள், 70களில் சினிமாக்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் ஜெயலலிதா. இவர் அதிமுகவின் பால் ஈர்க்கப்பட்டு அக்கட்சி மேடை கூட்டங்களில் பேசி மக்களை கவர்ந்ததன் மூலம் சீக்கிரமே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனார்.
எம்.ஜி. ஆர் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவே கட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு அக்கட்சியின் பொதுசெயலாளர் ஆனார்.
கட்சியை கட்டுக்கோப்பாகவும் அனைவரும் தன் சொல் கேட்கும்படி மிக திறமையாக நிர்வாகம் செய்தார். 1991ல் அதிமுக வெற்றி பெற்றபோது முதல் முறையாக செல்வி ஜெயலலிதா முதல்வர் ஆனார். அதன் பிறகு 2001 மற்றும் 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
2016ல் வெற்றி பெற்ற சில நாட்களில் அவரது உடல்நிலை மிக மோசமாகவே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 மாத காலத்திற்கு பின் அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 2016 டிசம்பர் 5 இதே நாள் ஜெயலலிதா காலமானார்.
அவரது மறைவுக்கு தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.













