ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் விளையாடலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.
நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதில் பிசிசிஐ தலைவர் கங்குலி சாதமான அளிக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் ரத்து செய்யப்படும் என்றே பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ‘தற்போதைய சூழ்நிலையில் இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்று ஐபிஎல் போட்டிகள் நடந்தால் அது உண்மையான இந்தியன் பிரீமியர் லீக்காக இருக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் எங்கள் அணி அதற்கு ஆதரவு அளிக்கும். போட்டிகளே நடக்காமல் இருப்பதற்கு, இந்திய வீரர்களை மட்டும் கொண்டு சிறப்பானது. இதுகுறித்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு பிசிசிஐ முடிவெடுக்கலாம்.’ எனக் கூறியுள்ளார். அவ்வாறே போட்டிகள் நடந்தாலும் பார்வையாளர்கள் இல்லாமல் காலியான மைதானத்தில்தான் நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது.







