---Advertisement---

வெளுத்து வாங்கிய மழை… ஒகேனக்கலில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… இதற்கெல்லாம் விதிக்கப்பட்ட தடை..!

By Sri
Published on: July 17, 2024
---Advertisement---

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அங்கு குளிக்க மற்றும் பரிசல் இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் தற்போது ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 22,000 கன அடியாக அதிகரித்து இருக்கின்றது. கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தினால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது.

கர்நாடகா அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு என்ற பகுதிக்கு வரத் தொடங்கியது. இதையடுத்து இந்த பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியிருக்கின்றது. கடந்த இரண்டு தினங்களாக 5000 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து தற்போது 20,000 கன அடிக்கும் மேல் வரத் தொடங்கி இருக்கின்றது.

வினாடிக்கு 21,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீராக உயர்ந்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அனைத்து அறிவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.