---Advertisement---

தமிழகத்தில் 5 நாட்களில்… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: August 12, 2024
---Advertisement---

தமிழகத்தில் இந்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதை தொடர்ந்து ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.

நாளை நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

14ஆம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதை தொடர்ந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Director Mysskin Issues Apology for Controversial Remarks at Teaser Launch

15ஆம் தேதி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

16ஆம் தேதி கோவையில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.