---Advertisement---

கவர்னரை சந்தித்து திமுகவினர் மீது புகார் தெரிவித்த பாஜக தலைவர்

Published on: December 13, 2021
---Advertisement---

சமீபத்தில் யூ டியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார் இது கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக உள்ளது என நேற்று முன் தினம் பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.

மேலும் திமுகவினர் பலர் ராணுவ தளபதி விவகாரத்தில் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளனர் அதன் ஸ்க்ரீன் ஷாட் உள்ளது அதையெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசு மாரிதாஸை மட்டும் கைது செய்வது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று கவர்னரை சந்தித்த அண்ணாமலை இது குறித்து கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்.

திமுகவினர் எழுதிய தவறான ஸ்க்ரீன் ஷாட்டுகளின் காப்பி யை கவர்னரிடம் அண்ணாமலை வழங்கியுள்ளார்.

உடன் பாஜகவின் கரு நாகராஜன்,மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர் சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.