---Advertisement---

சிறுமியை பலாத்காரம் செய்து… தாத்தாவை சுட்டுக்கொன்ற குற்றவாளி… பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்..!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரின் தாத்தாவை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் பகுதியை சேர்ந்த மொஹாரா கிராமத்தில் வசித்து வரும் 17 வயது பெண்ணை 2 மாதத்திற்கு முன்பு ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். 24 வயதான அஹிர்வார் என்ற நபர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

தலைமறைவாக இருந்த அந்த இளைஞன் நேற்று காலை 10.30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட தொடங்கி இருக்கின்றார். இதனால் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் அந்த சிறுமியின் 60 வயது தாத்தா குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவருக்கும் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த இளைஞனை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!