---Advertisement---

மாணவிக்கு வளைகாப்பு ரீல்ஸ் விவகாரம்… ஆசிரியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

மாணவிக்கு பள்ளியில் வளைகாப்பு நடந்தது போன்று ரிலீஸ் வெளியாகி வைரலான நிலையில் ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக பள்ளிகளிலேயே ரிலீஸ் வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பழக்கத்துக்கு ஆளான மாணவிகள் பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி அதனை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள்.

இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்துள்ளனர். இந்த விவகாரம் வேலூரில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என்று மன்னிப்பு கூறினார்கள்.

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுடன் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை ஆசிரியர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றார். அதாவது பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் புத்தகப் பையில் கத்தி, செல்போன் போன்ற தேவையில்லாத பொருட்களை எடுத்து வருகிறார்களா? என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பில் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால் அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பள்ளியில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும்.

மதிய உணவு இடைவெளியின் போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும். மேலும் பள்ளிக்கு மாணவ மாணவிகள் எந்த காரணத்தைக் கொண்டும் செல்போன் எடுத்து வரக்கூடாது என தெரிவித்திருக்கின்றார்கள். இந்த உத்தரவு இன்று முதல் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official poster of Thalapathy Vijay's Jana Nayagan movie with KVN Productions logo.

Jana Nayagan Update : “ஏப்ரல் 30-ல் ஜன நாயகன் வருகிறாரா?” – சென்சார் போர்டுக்கு செல்லும் விஜய் படம்; விநியோகஸ்தர்களைச் சந்திக்க சென்னை வரும் தயாரிப்பு நிறுவனம்!

Superstar Rajinikanth and Director Nelson Dilipkumar at the Jailer 2 wrap-up party with actor Vasanth Ravi.

Jailer 2 Update : “13 மாத காத்திருப்பு முடிந்தது” – ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு; பிளாஷ்பேக் காட்சியில் வசந்த் ரவி? நெல்சன் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Bodyguard Nayeem Moosa holding Actor Vijay's hand in a viral social media post about TVK movement.

TVK Movement : “நாளை தமிழகத்தின் இதயங்களை ஆள்வார்” – விஜய்யின் கையைப் பிடித்து மெய்க்காப்பாளர் போட்ட உருக்கமான பதிவு; வைரலாகும் புகைப்படம்!

Actor Kavin and Actress Nayanthara in a romantic still from the movie Hi.

HI Movie First Single : கவின் – நயன்தாரா கெமிஸ்ட்ரியில் ‘கன்னக்குழியா’! – இன்று மாலை வெளியாகும் முதல் பாடல்!

Actor Yash during an interview discussing his upcoming movies Toxic, Ramayana, and KGF 3.

YASH on KGF 3 : இப்போதைக்கு ‘ராக்கி பாய்’ வரமாட்டார்! – கேஜிஎஃப் 3 தாமதமாவது ஏன்? யஷ் விளக்கம்!

Director S.A. Chandrasekhar speaking during an interview about actor Vijay's Jananayagan movie leak.

VIJAY Jananayagan Leak : “எதிர்க்கட்சிகள் வேலையாக இருக்கலாம்!” – ஜனநாயகன் கசிவு குறித்து எஸ்.ஏ.சி பகீர் பேட்டி!