முன்னாள் இந்திய பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார அறிஞரான மன்மோகன் சிங் கடந்த கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன்சிங் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும், சாதாரன வார்டில்தான் உள்ளார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.













