ரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்குகளை ஏற்றினர்.
கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2400 ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் நேற்றிரவு 9 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற சொன்னார். அதன் படி மக்கள் விளக்குகளை ஏற்றினர். ஆனால் சில இடங்களில் விரும்பத் தகாத சில நிகழ்வுகளும் நடந்தன.
ஒரு சில இடங்களில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை சரியாகக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று விளக்குகளை எரிய விட, சில இடங்களில் தீபாவளிப் போன்று பட்டாசுகளை வெடித்தும் மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் வட இந்தியாவில் ஒரு வீட்டில் மொட்டை மாடியில் வைத்து வெடிகளை வெடிக்க எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்தது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பது ஆறுதல் ஆக அமைந்தது.







