---Advertisement---

திருப்பூரில் வெடி விபத்து… 3 பேர் உயிரிழப்பு… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக வரும் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததை திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்? திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டு இல்லாமல் இருக்கின்றது என்பதையே இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து உணர்த்தி வருகின்றது.

தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இது போன்ற விபத்துக்கள் நிகழாத வண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!

Stylish first-look poster of Ajith Kumar from his upcoming action film Dare Devil.

அஜித்தின் ‘டெர்டெவில்’ ஃபர்ஸ்ட் லுக்: நவம்பர் 2-ல் படப்பிடிப்பு தொடக்கம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!